இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் உதாசீனம் செய்வதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மக்கள் உதாசீனம் செய்யும் விதத்தில் தொடர்ந்தும் செயற்படுவார்களாயின் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டி ஏற்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு தளர்த்தப்பட்ட போக்குவரத்து விதிகளை துஸ்பிரயோகம் செய்யும் நிலை ஏற்பட்டால் அனைத்து நிகழ்வுகளிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்.

திருமண வைபவத்தில் 150பேர் மட்டுமே கலந்து கொள்வதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதனை விட அதிகமானோர் திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

மக்கள் கொரோனா விதிகளை மதிக்காமையினாலேயே கடந்த காலங்களில் கொத்தணிகள் உருவாகியது. ஆகவே கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை ஆகும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version