கொங்குநாட்டை தனிமாநிலமாக்குவது பா.ஜ.கவின் நிலைப்பாடு இல்லையாம்!

தமிழக மாநில பா.ஜ.க. தலை வராக இருந்த எல்.முருகன் மத்தி ய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது அவரு டைய சுய விவரத்தில் “கொங்கு நாடு’ என இடம்பெற்றிருந்தது.

இது பல்வேறு சமூக ஊடகங் களில் மிகப் பெரிய விவாதப் பொருளானது.

கொங்குநாடு தொடர்பான பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனின் டுவீட் பதி வொன்றும் விவாதத்துக்குள்ளா னது.

இது தொடர்பாக பல்வேறு கண்ட னங்களும், எதிர்வினைகளும் அடுத்த டுத்து வந்து கொண்டிருந்தன.

இருப் பினும், பா.ஜ.க. தலைமைத் தரப்பில் இது குறித் து வெளிப் படையாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்பட வில்லை.

இதனைத் தொடர்ந்து மேற்கு மண் டலமான கொங்கு பகுதியை ஒருங் கிணைத்து “கொங்குநாடு’ என தனி மாநிலமாக உருவாக்க தருமபுரியில் பா.ஜ.கவின் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் செயற் பாடு கொங்குநாடு விவகாரத்தில் மேலும் விவாதத்தை சூடு பிடிக்க வைத்தது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணா மலை சென்னையில் ஊடகவியலா ளர்களைச் சந்தித்து உரையாடியிருந் தார்.

அவரோடு அமைச்சர் எல்.முரு கன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அப்போது எல்.முருகன் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றபோது அவருடைய சுய விவரத்தில் “கொங்கு நாடு’ என இடம்பெற்றிருந்தது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப் பட்டது.

இதுகுறித்து அண்ணாமலை பதி லளித்தபோது, தற்போது டுவிட்டரில் அனைவருமே தங்களுடைய அடையா ளமாக பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்குநாடு என போட்டுக்கொள்கின் றனர்.

அதுபோல முருகனும் தமிழ்நாட் டிலிருந்து மத்திய அமைச் சரவைக்கு அனுப்பப்பட்ட ஒரு வர்” என்று கூறினார்.

அப் போது இடைமறித்த எல்.முரு கன், இது விவாதத்திற் குரிய விய மே அல்ல; அது ஒரு தட்டச்சுப் பிழையே எ ன் று கூ றி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்து, தருமபுரி பா.ஜ.க. மாவட்ட கூட்டத்தில் கொங்கு நாட்டை புதிய மாநிலமாக உருவாக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப் பட்டது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஒரு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதில் எங்களுடைய சில தலைவர்களும் கலந்து கொண் டனர்.

உடனடியாக அந்த மாவட்டத் தலைவரை தொடர்பு கொண்டு கட்சியின் நிலைப்பாடு அது இல்லை என்கிறபோது எதற்காக இதுபோன்ற தீர்மானத்தை எடுத்தார்கள்? என்பது குறித்த விளக்கத்தைக் கேட்டிருக் கிறோம்.

எங்களுடைய நிலைப்பாடு அதுவல்ல என்பதை தெளிவுப்படுத்து கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version