சீனாவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்குத் தடை!

கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மருத்துவமனை கள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்க ளுக்குச் செல்ல தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட் டோருக்கு தடை விதிக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸானது சீனாவில் பரவத் தொடங்கி இருந்தாலும், கட்டுப் பாடுகளை மேற்கொண்டதன் மூலம் அந்நாடு அதனை கட்டுப்படுத்தியது.

இருப்பினும், ஆசிய நாடுகளில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டாம் நிலை நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதி க்கப்பட்டுள்ளது.

ஜூலை 23ஆம் திக திக்குள் சுக்சியாங் நகர மக்கள் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தி யிருக்க வேண்டும் என அரசு அறிவு றுத்தியுள்ளது.

அப்படி செய்யவில்லை எனில், மருத்துவமனைகள், நூலகங் கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத் தவும் தடை விதிக்கப்படும் என எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version