சிறுமி உயிரிழந்தமையால் ரிசாத்துக்கு அச்சம்! பாராளுமன்றில் அமைச்சர் தகவல்!

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய மலையகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் நீண்ட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக பிரதேப் பரிசோதனையில் வெளியாகியிருந்தது.

இதனை அடுத்து ரிஷாத்துக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாகவே வைத்தியசாலைக்கு சென்று விட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ரிஷாட் பதியூதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி குறித்து, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்ததாவது

ரிசாத் பதியுதீனுக்கு எதிராக சதோச விற்பனை நிலையத்தில் கோடிக்கணக்கான பண ஊழல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

ரிஷாத் பதியுதீன் குறித்து எதிர்க்கட்சியினராகிய நீங்கள் அமைதியாக இருங்கள். நாங்கள் சரியான நேரத்தில் உரிய வகையில் ஆதாரங்களைத் திரட்டி வழக்குகளை தொடர்வோம்.

ரிஷாத் பதியுதீன் வீட்டில் இருந்த 16 வயது சிறுமியின் மரணம் குறித்து ரிசார்ட் குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்களையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அத்தோடு சிறுமியை வேலைக்கு அழைத்துவந்து இடைத்தரகரது வங்கிக் கணக்கு விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version