இலங்கை

தமிழர் பகுதியின் முதல் பெண் விமானி! குவியும் வாழ்த்துக்கள்!

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஒன்றான வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலில் இருந்து 1வது பெண் விமானி இமானுவேல் எவாஞ்சலின் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறநந்த இவர் பாடசாலைக் கல்வியினை,மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரத்தினை நிறைவு செய்தார்.

சிறுவயது தொடக்கம் விமானியாக வரவேண்டும் எனும் இலக்கினை அடைவதற்காக கடந்த வருடம் (2020) கொழும்பிலுள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறைவு செய்துள்ளார்.

இன்னும் இரு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவு செய்து முழு விமானியாக வெளிவர உள்ள இமானுவேல் எவாஞ்சலின், இலங்கை தமிழர் பகுதியின் 1வது பெண் விமானி என பெயரெடுத்துள்ளார்.

பொருளாதார ரீதியில் மன்னார் மாவட்டம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற போதிலும், கல்வி கலை கலாச்சாரம் விளையாட்டு தனிமனித திறமைகளில் மன்னார் மாவட்டம் எப்பொழுதும் முன்னிலையிலேயே இருக்கிறது.

இந்நிலையில் மன்னர் மண்ணிற்கு பெருமை தேடிதரும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இமானுவேல் எவாஞ்சலினிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button