சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! சிக்கலில் ரிஷாத்தின் குடும்பம்!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதினின் வீட்டில் பணிபுரிந்த மலையகத்தை சேர்ந்த 15வயது சிறுமி ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தார்.

72%தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த 15ம்திகதி உயிரிழந்த சம்பவமானது அதிர்வினை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த சிறுமி நீண்ட காலகமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையானது பிரேத பரிசோதனை முடிவுகளில் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவங்கள் குறித்து பொரளை பொலிஸார், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் குடும்பத்தினரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 17ம் திகதி ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்பவர்கள்டம் 6 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு இருந்தனர்.

அத்துடன் ரிஷாத்தின் தாயார் மற்றும் தந்தையிடமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.

இன்று திங்கட்கிழமை ரிஷாத்தின் மனைவியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிஐடியினரின் தடுப்பு காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்திடம் விசாரணைகளை ஆரம்பிக்க பொலிசார் முற்பட்ட போது திடீரென சுகயீனமடைந்த ரிஷாத் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் வைத்திய ஆலோசனைக்கமைய ரிஷாத்திடம் விசாரணைகளை  நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கினறனர்.

**********************

குறித்த சிறுமி தனது பதினைந்து வயதில் ரிஷாத்தின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். மாதம் 20ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த எட்டு மாதங்களாக வீட்டிற்கு செல்லவில்லை.

18வயதிற்கு குறைந்த சிறுமியை வேலைக்கு அமர்த்தியது குற்றமல்லவா? தற்கொலை செய்யும் அளவிற்கு சிறுமியின மனநிலை சென்றதற்கு காரணம் என்ன? இது திட்டமிடப்பட்ட தற்கொலையா? என மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.

**********************

Exit mobile version