ஜேர்மனியில் கடும் வெள்ளம்! 133 பேர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் பெய்த கடும் மழையினால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தற்போது வரை சுமார் 133பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீப நாட்களாக தொடர்ந்து பெய்த அடை மழை ஜேர்மனியில் பொழிந்தது. இதனால் அண்டை நாடுகளான நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்திலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

இதில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பாலங்கள் என மொத்தமாக வெள்ளம் அடித்து சென்றது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழக் கூடிய அபாய நிலையில் உள்ளது.

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் இருக்கும் எர்ஃப்ட்ஸ்டாட்-பிளெசெமில் என்ற கிராமத்தில் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் 3 அடுக்கு மாடி வீடுகளும், வரலாற்று கோட்டையும் இடிந்து விழுந்துவிட்டது.

ஜேர்மனியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் தொடர்பான வீடியோக்களை கீழே காணலாம்.

Exit mobile version