நடிகை ரோஜாவின் பதவியை பறித்த ஆந்திர முதல்வர்!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருந்த ரோஜாவின் பதவியை ஆந்திரமுதல்வர் பறித்துள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை ரோஜா வகித்து வந்தமையால் மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு பதவியினை ஆந்திரமுதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பறித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்.எல்.ஏ வாக இருக்கும் நடிகை ரோஜாவிற்க்கு ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜாதி வாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டமையால், ரோஜாவுக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை.
இதனை அடுத்து, ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறையின் தலைவராக நடிகை ரோஜா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டுமென முடிவு செய்த முதல்வர் ஜெகன் மோகன், எம்எல்ஏக்கள் வகித்து வந்த பதவிக்கள் அனைத்தையும் பறித்துள்ளார்.

அதில், எம்எல்ஏ ரோஜா வகித்து வந்த ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version