பிக்பாஸில் சர்ச்சை சீரியல் நடிகர்? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவி நடாத்தும் பிக்பாஸ் சீசன் ஐந்திற்காக ரசிகர்கள் பலர் ஆவலோடு காத்திருகின்றனர்.

ஏற்கனவே நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக சீசன் ஐந்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் ஐந்திற்கான போட்டியாளர்கள் யாரென ஏற்கனவே பல திரை பிரபலங்களின் பெயர்கள் இணையத்தில் வெளிவந்தன.
இப்பொழுது, அந்த லிஸ்டில் கடந்த சீசன் போலவே இம்முறையும் விஜய்டிவி பிரபலங்களை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதில் ஒரு போட்டியாளர் சீரியல் நடிகர் ஈஸ்வர் என கூறப்படுகிறது.

அந்த சீரியல் நடிகர் வேறு யாருமில்லை, சில மாதங்களுக்கு முன்னர் ஜெய்ஸ்ரீ தன் கணவர் அவரோடு நடிக்கும் மகா லட்சுமியோடு கள்ள உறவில் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார் அல்லவா? அவரே தான்.

இந்நடிகரை சீசன் ஐந்தில் களமிறக்க டி.ஆர்.பி தான் காரணமாக இருக்குமென தெரிகிறது. மேலும், பல ரசிகர்கள் ஷிவாங்கி, மற்றும் அஷ்வினை அழைத்து வர கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவர்கள் பட வாய்ப்புகளால் பிஸியாக இருப்பதால், இந்த சீசனில் குக் வித் கோமாளி பிரபலங்கள் யார் கலந்துகொள்வார்கள் என ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Exit mobile version