பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணியில் இருந்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்த 15வயது சிறுமிக்கு சட்ட ரீதியான தீர்வினை பெற்றுதருமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
டயகம 3ம் பிரிவில் வசித்த 15 வயது சிறுமி பணிப்பெண்ணாக கடந்த வருடம் ஒக்டோபரில் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஜீலை 3ம் திகதி தீக்காயங்களுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜீலை 15ம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சிறுமியின் மரணம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார்.
இதன்போது குறித்த சிறுமியின் மரணம் குறித்தும், சிறுமியை வேலைக்கு அமர்த்தியது குறித்தும் விரிவான விசாரனைகளை நடாத்தி சட்டரீதியான தீர்வை பெற்றுதருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.