பதினேழு தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி செயலகத்தின் முன் அரசிற்கு எதிரான பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது
இராணுவ ஆட்சியின் ஊடாக சிவில் நிர்வாகத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது, இலவச கல்விக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட ஆசிரிய சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட சிவில் அமைப்பினர் விடுதலை செய்யப்பட வேண்டும் ஆகிய விடையங்களை வலியுறுத்தப்பட்டது.
அத்தோடு தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளிற்க்கு அரசு விரைவில் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து ஜனாதிபதியின் செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.