எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் ஹஜ் பெருநாளை அனுஷ்டிக்கவுள்ளனர்.
இந்நிலையில்,ஹஜ் பெருநாள் அன்று இஸ்லாமிய சமயத்தவர்கள் மிருகங்களை கொலை செய்து தானமாக வழங்கி வரும் நடைமுறைக்கு இவ்வாண்டு அனுமதி வழங்கப்படாது என இஸ்லாமிய மத விவகார கலாச்சார திணைக்களம் மற்றும் வகுப்சபை ஆகியன தீர்மானம் எடுத்துள்ளன.
இதனை அனைத்து பள்ளிவாசல்களுக்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாக இஸ்லாமிய மத விவகார, கலாச்சார திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
பள்ளிவாசல் வளாகத்தினுள் மிருகங்களை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டாமென அறவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
எதிர்வருகின்ற 21ம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்றில் இருந்து 3 நாட்களுக்கு இத்தானம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
எனினும் 23ம் திகதி பௌர்ணமி தினம் என்பதால் இத்தானம் வழங்கும் நிகழ்வுகளை 2 நாட்களுக்கு வரையறை செய்யப்பட்டுள்ளது.