இரு நாட்களில் ஒரு கோடி! சாதனை படைக்கும் வலிமை!

எச்.வினோத் இயக்கத்தில நம்ம தல அஜித் நடிப்பில வலிமை திரைப்படம் உருவாகி வருது.

இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருகிறாரு.

போனி கபூர் தயாரிக்கிற இந்த திரைப்படத்தில நம்ம அஜித்துக்கு ஜோடியா பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கிறாங்க.

வலிமை படத்தோட அப்டேட்டுக்காக ஒரு வருசத்துக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, எந்தவித முன் அறிவிப்புமே இல்லாம வலிமை படத்தின்ட மோஷன் போஸ்டரை இரண்டு நாளுக்கு முன்னாடி வெளியிட்டாங்க.

அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், யுவன் சங்கர் ராஜான்ட மாஸான பின்னணி இசை என ரசிகர்களை திருப்திபடுத்திற விதத்தில அமைந்திருக்கும் இந்த மோஷன் போஸ்டர், ஷோசியல் மீடியல வைரலாகி வருது.

இந்நிலைல, வலிமை படத்தோட மோஷன் போஸ்டர் வெளியான இரண்டே நாள்ல யூடியூபில 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைச்சிருக்கு.

இதையொட்டி அஜித்தின் தோற்றம் அடங்கிய புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கு. இதால அஜித்தோட ரசிகர்கள் ரொம்ப உற்சாகமடைஞ்சு இருக்காங்க.

Exit mobile version