12.5 கோடி ரூபாவினை இலஞ்சமாக பெற்ற அதிகாரி!

கடந்த 2015ம் ஆண்டில் சுமார் 12.5 கோடி ரூபாவினை இலஞ்சமாக பெற்று கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட சுங்க திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீளவும் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

பஞ்சிகாத்தை பகுதியில் வசித்துவரும் தொழில் அதிபர் ஒருவர் இறக்குமதி செய்த 1,50 கோடி ரூபா பெறுமதியான வாகன உதிரிபாகங்களை சலுகை அடிப்படையில் விடுவிக்க 12.5 கோடி ரூபா இலஞ்சமாக வாங்கியமை தொடர்பாக குறித்த அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணையாளரது எழுத்துப்பூர்வமான ஒப்புதல் ஆவணம் நீதிமன்றில் தாக்கல் செய்யபடவில்லை என பிரதிவாதி முன்வைத்த ஆட்சேபனை காரணமாக மீளவழக்கு தாக்கல் செய்தல் அடிப்படையில் குறித்த வழக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னர் அவர்களுக்கு எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version