யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
யாழ் மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் இல்லாதவர்களுக்கு நிரந்தர கல்வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு அதிகளவான நிதி இந்த வருடத்தில் கிடைத்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணைத்தலைவர்களது வழிகாட்டலில் அரச எண்ணகருவிற்கு அமைவாக வீடுகள் இல்லாதவர்களுக்கு நிரந்த கல் வீடுகள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கான நிரந்தர வீட்டுதிட்டம் வழங்குவது குறித்து நடைபெற்ற ஊடக சந்திப்ப்பின் போதே மாவட்ட அரச அதிபர் இதனை தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் 21ஆயிரம் வீட்டுதிட்டம் அவசியமாக இருந்த போதிலும் 5,000 பேருக்கு மிக அவசியமாக காணப்படுகிறது.
இதில் 15 பிரதேச செயலாள பிரிவிற்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் 2,162 கல் வீடுகள் அமைக்க நிதி கிடைத்துள்ளது.
1,532 நபர்களுக்கு ஒரு மில்லியன் வீட்டு திட்டத்திலும், 630 பேருக்கு ஆறு இலட்சம் வீடுகள் எனும் திட்டத்திலும் யாழ் மாவட்டத்திற்கு குறித்த 2162 கல் வீட்டு திட்டம் கிடைத்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்தார்.