சில வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி கோத்தபாயவினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராசபக்சவிற்கும் இடையின் இன்றைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்றதாக துமிந்த சில்வா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் துமிந்தவிற்கு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா கடந்த ஜூன் 24ம் திகதி அன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
இதனை அடுத்து கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்றவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தபாய எடுத்த முடிவை ஐ.நா மற்றும் மனித உரிமை குழுக்கள் கடுமையாக விமர்ச்சித்திருந்தது.
இந்நிலையில் அரசியல் பழிவாங்கள் குறித்து விசாரணைகளை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, துமிந்தசில்வாவை விடுவிக்க வேண்டுமென பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன என தெரிவிக்கப்பட்டிருந்தது.