தற்போதைய அரசை கவிழ்க முடியாது! நிதி அமைச்சர் பசில்

தற்போதைய அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்க  முடியாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்

பிரயோசனமற்ற இவ் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு விட்டு நாட்டினதும் மக்களதும் நலன்சார் அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

“நான் நாடாளுமன்ற உறுப்பினராக – அமைச்சராகப் பதவியேற்றவுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பிட்ட ஒரு சிலரைகொண்டு முன்னெடுக்கப்படும் இவ் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசை கவிழ்க்கவே முடியாது.

நாட்டு மக்களது மனதில் ‘மொட்டு’ சின்னமே இருகின்றது. இந்த ‘மொட்டு’க்கு வாக்களித்துத்தான் நாட்டின் பலமிக்க ஜனாதிபதியையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான அரசை மக்கள் தெரிவு செய்தார்கள்.

எதிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டங்கள், நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் வழங்கிய அமோக ஆணைக்கு இணையாக வர முடியாது.

ஆகவே, பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக் கைவிட்டுவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Exit mobile version