இலங்கை

பாடசாலைகளை மீள ஆரம்பிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளை செய்து பாடசாலைகளை மீள ஆரம்பிக்குமாறு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், கொரோனாவை காட்டி எங்களை வதைக்காதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையை உடனே குறை’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இதனை அடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண பொலிஸார் போராட்டத்தை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியதை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது

.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button