இலங்கையின் பல பாகங்களிலும் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 4இலட்சத்தி 75ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை வீசிய கடும் காற்று காரணமாகவே மின்சாரம் தடைப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சுமார் 12,000 மின்தடை சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்தடை காரணமாக சுமார் 475,000 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மின்சாரத்தினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
காலி, மாத்தறை, கிரிபத்கொட, கண்டி, பேராதனை, குளியாப்பிட்டி, குருணாகல், களனி, இரத்மலானை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் மின் தடை சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.