இலங்கை
பொலிஸ் அராஜகத்துக்கு எதிராக நீதிமன்றை நாடுகின்றது ஐ.தே.க!
நாட்டில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் சட்ட நிபுணர் களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைத் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்திப் பொலிஸார் கைதுசெய்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டி யுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்வதற்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு வோரைக் கைதுசெய்வதற்கும் முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோ சனைக்கு அமைய கட்சியின் சட்ட நிபுணர்கள் அடுத்த வாரம் உயர்நீதி மன்றத்தில் இதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக் கல் செய்யவுள்ளது எனத் தெரியவரு கின்றது.