ராஜபக்ச குடும்பத்தில் இருவர் அமைச்சராக பதவி பிரமானம்!
இன்றையதினம் பசில் ராஜப்கச பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அதேவேளை நிதியமைச்சராகவும் பதவிபிரமானம் செய்து கொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் நிலவிய வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ச நியமிக்கப்படுவதாக நேற்றையதினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிருந்தது.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் புதிதாக சில இராஜாங்க அமைச்சர்கள் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த இன்னுமொருவர் இன்றையதினம் ராஜாங்க அமைச்சராக பதவிபிரமாணம் செய்து கொண்டார்.
மொஹான் டி சில்வா – கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராகவும்,
சஷீந்திர ராஜபக்ச – சேதனப் பசளை உற்பத்தி, அபிவிருத்தி மற்றும் விநியோகம், நெல், தானிய உற்பத்தி, மரக்கறி, பழங்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், விதை உற்பத்தி மற்றும் விவசாய தொழில்நுட்பம் ராஜாங்க அமைச்சராகவும பதவிப்பிரமாணம் செய்தனர்.
மஹிந்த ராஜபக்சவின் அண்ணனானசமல் ராஜபக்சவின் மகனே சஷீந்திர ராஜபக்ச என்பதும் குறிப்பிடத்தக்கது.