உள்ளூர் சந்தைகளில் சீனி, பருப்பு ஆகியவை அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றமையினால் சீனி மற்றும் பருப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
லங்கா சதோச மற்றும் கூட்டுறவு திணைக்களம் ஆகியவற்றின் மத்தியஸ்தத்துடன், பருப்பு மற்றும் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
பருப்பு மற்றும் வெள்ளை சீனி என்பன உள்ளூர் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து குறித்த இரு பொருட்களையும் இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில், அத்தியாவசியப் பொருட் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.