எரிபொருள் விலை குறைக்கப்படும்! அரச தகவல் திணைக்களம் தெரிவிப்பு!

எதிர்வரும் காலத்தில் உலகசந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்த எரிபொருளின் விலை குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று நிலைமைகளுக்கு மத்தியிலே நாட்டினது  பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து மீளவும்  பொருளாதாரத்தினை துரித கதியில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு  நாடு வழமையான நிலைமைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இதற்கு நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை நீக்கப்பட வேண்டும்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை, மக்களின் உணர்வுகளை அறிந்த அரசாங்கம் எனும் ரீதியில் நன்கு அறிந்துள்ளோம்.

எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தவுடன், அதன் நிவாரணத்தை உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version