சர்வதேச அழுத்தம்! வளைந்து கொடுக்கிறதா இலங்கை அரசு?

இன நல்லிணக்கம் குறித்து இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசு உத்தியோகபூர்வ விளக்கம் கொடுத்துள்ளது.

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை  வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவை இணை குழுவொன்று கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குழுவினால் கடந்த ஜூன் 24ஆம் திகதி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை புதுப்பித்துக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அடிக்கடி தொடர்புகளை பேணி வருவதாகத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான வரிச் சலுகையை நீடிப்பது குறித்து தீர்மானிக்கும் நோக்கில் விசேட ஐரோப்பிய பிதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்யவுள்ளதாகத் கூறப்படுகிறது..

Exit mobile version