கொவிட் தொற்று காரணமாக தற்போது இலங்கையில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி 100ற்கும் குறைந்தளவான எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்டமைந்த பாடசாலைகளை, இம்மாத இறுதிக்குள் ஆரம்பிப்பது குறித்தே அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நடவடிக்கையானது சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ் இவ்வாறு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் இனம்காணப்பட்டதை அடுத்து ஏப்ரல்மாத இறுதியிலிருது அனைத்து பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.