இலங்கை

அமெரிக்க இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி நிறைவு!

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து பங்கு கொண்ட கூட்டு பயிற்சி நடைவடிக்கை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

இந்த கூட்டு கடல் பயிற்சி நடைவடிக்கையானது கடந்த ஜூன் 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இலங்கையின் கிழக்கு கரையோர கடல் பிராந்தியத்தில் நடைபெற்றது..

இக் கூட்டு பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்வுகள் இலங்கை கடற்படை பிரதம அதிகாரியும் கடற்படையின் கிழக்கு பிராந்தியத் கட்டளைத் தளபதியு ரியர் அட்மிரல் வை.என் ஜெயரத்ன பங்குபற்றி இருந்தார்.

இறுதிநாள் வைபவத்தில் விசேட உரையாற்றிய இலங்கை கடற்படை பிரதம அதிகாரி, இக்கூட்டு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்ததுடன் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.

இந்த கூட்டுபயிற்சி கடற் படைகளுக்கு இடையிலான கடல்சார் தொடர்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பங்காளி நாடுகளிடையே வலுவான கடல் கூட்டாண்மை ஆகியவற்றை பலப்படுத்த வழிவகுக்கும் என கடற்படை தெரிவித்தது.

மேலும் இந் நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னங்களும் பரிமாறி கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button