இலங்கையில் முதலிடத்திற்கு வரும் டெல்டா!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு சட்டங்களை செயற்படுத்த  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள  அரசு  பின்வாங்கினால் டெல்டா முதலிடத்திற்கு வருமென அரச வைத்திய சங்க செயலாளர் நவின் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது மாறுபாட்டினால் பாரிய ஆபத்தான நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும் என சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.

சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமைய அதற்கு தயாராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதுவரை நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு கொவிட் மாறுபாடுகளினால் ஏற்படவுள்ள பாரிய ஆபத்துக்கள் குறித்து அவதானமாக செலுத்தி அரசாங்கம் செயற்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர்  தெரிவித்தார்.

தற்போது உள்ள கொவிட் மரபணு அல்லது மாறுபாடடைந்த மரபணு போன்றவற்றை அரசாங்கம், சுகாதார பிரிவு மற்றும் மக்கள் இணைந்து உரிய முறையில் செயற்படுவதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

எனினும் டெல்டாவினை விட மோசமான மாறுபாடு நாட்டில் பரவுவதனை நிறுத்த முடியாமல் போய்விடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version