உலகம்

மீளவும் முதல் இடத்தை பிடித்தார் கேன் வில்லியம்சன்!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிதலைவர் கேன் வில்லியம்சன் MRF டயர்ஸ் ICC ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தரவரிசையில் முதல் இடத்தை  பிடித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் கடந்த வாரம் சவுத்தாம்ப்டனில் நடந்த ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல, தனது அணியை வழிநடத்திய பின்னர் ICC ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தரவரிசையில் முதலிடத்தை மீட்டுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் 30 வயதான கேன் வில்லியம்சன் பெற்றுகொண்ட 49 மற்றும் 52 ஓட்டங்கள் 900 புள்ளிகளை கடப்பதற்கு வழி வகுத்தது.

தற்போது அவர் ஸ்டீவ் ஸ்மித்தை விட (891 மதிப்பீட்டு புள்ளிகள்) கூடுதலாக 10 புள்ளிகளை பெற்று முதல் இடத்திற்கு வந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் போது 2015 நவம்பரில் முதன்முதலில் ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தரவரிசையில் முதலிடத்தை கேன் வில்லியம்சன் பிடித்திருந்தார்.

தற்போது நியூசிலாந்து அணி ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button