அமெரிக்க உயர் பதவியில் இலங்கை தமிழ் வம்சாவளி பெண்!

அமெரிக்க அரசின் உயர் பதவி ஒன்றில் இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு கொள்கைகள் தொடர்பான அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் ஆலோசகராக ரோஹினி கொசோக்லு எனும் பெண்  நியமிக்கபட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனட்சபையினது துணை தலைவராக கமலா ஹாரிஸ் பதவி வகித்த போது, அவரது நிர்வாக பிரிவினது தலைமை நிர்வாகியாக ரோஹினி கொசோக்லு செயற்பட்டுள்ளார்.

அமெரிக்க செனட்டர் ஒருவருக்கு தலைமைப் பணியாளர் பதவியை வகித்த ஒரே அமெரிக்க – ஆசியப் பெண் என்ற பெருமையையையும் அவர் பெற்றார்.

ரோஹினியின் பெற்றோர் 1980 காலப்பகுதியளவில்  யாழ்ப்பாணத்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களாவர்.

ரோஹினி மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தனது பட்ட கல்வியை பூர்த்தி செய்தவராவார்.

மிச்சிகன் செனட்டர் டெபி ஸ்டெபெனோ சார்பில் பணியாற்றும் போது கடிததொடர்பு மேலாளராக அரசியலில் நுழைந்தார்.

பட்டம் பெற்ற பின்னர் ஸ்டீபெனோவின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றியதோடு அதன் பின் ஒரு மூத்த சுகாதார ஆலோசகராக பணியாற்றினார். அதேநேரத்தில் ஒபாமா கெயார் திட்டத்திலும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version