மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரத்தடை!

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட மேலும் சில நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்கு ஜீலை13ம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதிஅரேபியா, ஓமான், பஹரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருவதற்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த நூற்றிக்கும் அதிகளவானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

தற்போது வெவ்வேறு உருமாறிய விதமான வைரஸ்கள் வெளிநாடுகளிலே  இனங்காணப்படுகின்மையால் நாட்டு மக்களது நலன் கருதியே இந்த தடை  விதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தொற்று கட்டுப்படுத்தல் குறித்து ஒவ்வொரு வாரமும் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறும். இதன் போது நாட்டில் 65 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும் , பல நாடுகளிலும் நிலைமாறிய வைரஸ் பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு நிலைமாறிய வைரஸ் பரவல் அபாயத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய நாளை மறுதினமான முதலாம் திகதி முதல் 6 மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு தடை விதித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version