இலங்கை விமானங்களுக்கான தடை நீடிக்கப்பட்டது!

கொரோனா தொற்று பரவல் அச்சத்தினால் இலங்கை, இந்தியா உட்பட 14 நாடுகளது  விமானங்கள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீடித்துள்ளது.

இதனை ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது விமானங்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட நாடுகளவான , இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், லைபீரியா, நமிபியா, சியாரா லியோன், காங்கோ, உகாண்டா ஜாம்பியா, வியட்நாம், பங்ளாதேஷ், நேபாளம், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளது விமானங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், சரக்கு விமானங்கள், தொழில் மற்றும் வாடகை விமானங்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 24ம் திகதியிலிருந்து இலங்கை உட்பட சில நாட்டு விமான சேவையை ஐக்கிய அரபு அமீரகம் தடைசெய்தது.

இந் நிலையிலேயே, குறித்த 14 நாடுகளில் இருந்து வருகின்ற  விமானங்களுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Exit mobile version