இந்தியாவில் ஒரே நாளில் 86.16 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது உலகளவில் ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தபட்ட எண்ணிக்கையில் சாதனை அளவாகும்.
இந்தியாவிலே கோவாக்சின், கோவிஷீல்டு ஏனும் இரு வகையான தடுபூசிகள் போடப்பட்டு வருகின்றது.
இதனை தவிர ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கபட்டுள்ளது.
ஜனவரி 16ம் தேதியில் இருந்து தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பமாகியது.
முதல்கட்டமாக மருத்துவ, சுகாதார முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
அத்துடன் 60 வயதுக்கு அதிகமானோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.
2வது கட்டமாக வேறு நோய்கள் இல்லாத 45 வயதுக்கு அதிகமான அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
3வது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கபடுகிறது.
இதனை அடுத்து 18 வயதுக்கு அதிகமான அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இத்திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
முதலாவது நாள் அன்றே இதுவரை இல்லாத அளவிற்கு 86.16 லட்சம் (86,16,373) பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது உலக அளவில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கையின் சாதனை அளவாகும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 1 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது எனவும் இவ்வாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது எனும் இலக்கை நோக்கி பயணிப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.