தற்போது ஆளும் கட்சியில் உள்ள 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்ஹவுடன் இணைய வாய்ப்புள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவும் மாட்டார்கள்.அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மாட்டார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைய உள்ளதாக வெளியாகிய தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திற்கும் வரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது. ரணில் என்பவர் எமக்கு பிரச்சினையே அல்ல.
தற்போது நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
சமூக வலைத்தளங்கல் ஊடாக பரவிய வதந்திகள் காரணமாகவே சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது சாதாரண விடயமே ஆகும். எனினும் கட்சிக்குள் பிளவுகள் இல்லை என்றார்.