நாளை முதல் அமுலாகும் முக்கிய கட்டுப்பாடுகள்!

நாளை திங்கட்கிழமை சில கட்டுப்பாட்டின் கீழே நாடு திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த கட்டுப்பாட்டிற்கமைய மக்கள் செயற்பட வேண்டும். அலுவலக பணிக்காக குறைந்த ஊழியர்களே அழைக்கப்பட வேண்டும்.

வீட்டில் இருந்து பணி செய்ய கூடியவர்களை பணி செய்வதற்கு அவ்வாறே  அனுமதிக்க வேண்டும்.

பொது போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கைக்கு எற்ப மட்டுமே  பயணிகள் பயணிக்க வேண்டும்.

முகக் கவசத்தினை அனைவரும் அணிவது கட்டாயமாகும். அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கான ஏனைய சட்டங்களை அதே முறையில் பின்பற்ற வேண்டும்.

மாகாணங்களுக்கு இடையே ஆன பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும்  அமுலில் இருக்கும்.

விசேட முக்கிய காரணங்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையே பயணிக்க வேண்டும்.

சுற்றுலா, மத யாத்திரைகளுக்கு அனுமதி வழங்கப்படாது. பொது இடங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாடு நாளை 21ம்திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

எனினும் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மீள  பயணகட்டுப்பாடு தளர்த்தப்படும்.

Exit mobile version