இலங்கை

இலங்கையின் நிதியமைச்சராகிறார் பசில்?

பொருளாதார புனர்வாழ்வு ஜனாதிபதி செயலணியின் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ஷவை அமைச்சராக பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

அனேகமாக பசில் ராஜபக்ஷவிற்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் பேசியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில், பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஒருவர், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்த தகவல்கள் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கும் பசில் ராஜபக்ச எதிர்வரும் சில நாட்களில் இலங்கைக்கு திரும்ப உள்ளார்.

Related Articles

Back to top button