மட்டக்களப்பு வாவியில் 15 இலட்சம் இறால் குஞ்சுகள் விடுவிப்பு!

மட்டக்களப்பு வாவியில் சுமார் 15 இலட்சம் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்றொழில் திணைக்கள ஏற்பாட்டில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு பகுதிகளில் இன்று(18.06.2021) காலை 4.00 மணிக்கு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையில் குறித்த இறால் குஞ்சுகள் வாவியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன.

இங்கு கருத்து வெளியிட்ட மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ், மட்டக்களப்பு வாவியில் மீன் வளத்தை அதிகரிக்கவும் மீனவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் குறித்த பணி முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் பலனை இன்னும் சில மாதங்களில் மீனவர்கள் அடைந்து கொள்வர் என்றும் தெரிவித்தார்.

அத்தோடு எதிர்காலத்தில் மேலும் இறால் குஞ்சுகளும் மீன் குஞ்சுகளும் விடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version