உலகில் உள்ள மக்கள் தொகையில் தற்போதுவரை 12% மக்களுக்குதான் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுதும் 93 கோடியே 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.
அதாவது ஜூன் 10 ஆம் திகதி நிலவரபடி கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் புள்ளி விபரம் வெளியாகியது.
இதில் ஒட்டு மொத்த சனதொகையில் தற்போதுவரை 12% மக்களுக்கு பேருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் மொத்த சனத்தொகையில் 63.1% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதையடுத்து கனடாவில் 62.7% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 13.7% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 51.4 % மக்களுக்கும், பிரிட்டனில் 62.7% மக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் தடுப்பூசி தீவிரமாக போடப்பட்டு வந்தாலும், ஒரு நாளில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட மிக அதி வேகத்தில் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.