துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்!

இன்றைய தினம் ஜனாதிபதிக்கும் கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழுவிற்கு என நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து  கலந்துரையாடப்படவுள்ளது.

துறைமுக நகரத்திற்கான பொருளாதார ஆணைக்குழுவின்  சட்ட மூலத்திற்கு அமைவாக, நியமனம் செய்யப்படவுள்ள உயர் பதவிகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

துறைமுக நகரிற்கான அனைத்து பதவிகளுக்குமான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் ஆணைக்குழு முழுமையாக செயற்படுமென ஆணைக்குழுவின் தலைவர் காமினி மாரப்பன தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகநகர திட்டத்தின் உட்கட்டமைப்புகள் குறித்தும் அங்கு முன்னெடுக்க படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு  வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version