இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்!

தற்போது கொரோனா பரவலானது நாட்டில் வேகமாக பரவி வருகின்ற நிலையில் அடுத்த வாரத்தில் இருந்து டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்குமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் மழை மற்றும் வெள்ள சூழ்நிலை நிலவுகிறது.

ஆகவே அடுத்த வாரம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க கூடும்.

கொழும்பு மாவட்டமே அதிக அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது.

அத்துடன், கண்டி, காலி, குருணாகல், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு பரவல் அபாயம் அதிகரித்துள்ளது.

ஆகவே டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் விதத்தில் தமது சுற்று சூழலை வைத்திருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version