ஆப்கானிஸ்தான் நாட்டு அரசிற்கும் தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகிறது.
நாடு முழுதும் பல பகுதிகளில் தலீபான் தீவிரவாதிகள் போலீசார்ரும் இராணுவத்தினரும் செல்லும் வீதிகளில் கண்ணி வெடிகளை புதைத்து வைக்கின்றனர்.
ஆனால் இவற்றில் அனேகமாக உயிரிழப்பது அப்பாவி மக்களே.
இதனால் ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனங்கள் வெடிக்காத கண்ணி வெடிகளை அகற்றும் பணியை முன்னெடுத்து வருகின்றன.
கண்ணிவெடிகளை அகற்றும் ஹாலோ எனும் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பாக்லானில் முகாமிட்டு கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் ஹாலோ தொண்டு நிறுவன தொழிலாளர்கள் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை முடித்து விட்டு முகாமில் தூங்கி கொண்டிருந்தனர்.
இதன்போது முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் தூக்கத்தில் இருந்த தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலியாகியதுடன் பலர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும் தலீபான் பயங்கரவாதிகளே இதனை நடத்தியதாக ஹாலோ நிறுவனம் தெரிவித்துள்ளது.