போலி செய்திகளை பகிர்ந்தால் பிடியானை இன்றி கைது! பொலிஸார் எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களின் ஊடாக பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படாலம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கைது செய்யப்பட்டவர்கள் தண்டனைச் சட்ட கோவையின் 120, 286, 286 ஏ, 291 ஏ, 291 பி, 345, 365 டி, 402, 403, மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம்.

தண்டனை சட்டம்

ஆகிய கட்டளை சட்டத்தின் கீழே வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

போலி செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்புபவர்களை கண்காணிக்க  குற்ற புலனாய்வு பிரிவினரின் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்  போலி செய்திகளை பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்ட ஒருவர் கைது செய்யப்படு 2இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்க பட்டதாகவும் சுட்டி காட்டப் பட்டுள்ளது.

Exit mobile version