குரோக்கர் எனும் அரியவகை மீனை பாகிஸ்தானிய மீனவர்கள் பிடித்திருந்தனர்.
இதில் ஒரு மீன் சுமார் ரூ7.80 இலட்சத்திற்கு விற்பனை ஆகியமை பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி உள்ளது.
26கிலோ எடை கொண்ட ஒரு மீனின் விலை சுமார் 7.8இலட்சத்திற்கு விற்பனையானது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இதே ரக மீன் சுமார் 17 இலட்சத்திற்கு விற்பனையாகியது.
இவ்வகை மீன்கள் பெரும்பாலும் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இடைபட்ட கடல் பகுதியான சவுத்எல்லோ கடற்பகுதியில் அதிகமாக காணப்படுமாம்.
இம்மீன்கள் கடலின் மிகவும் ஆழமான பகுதியில் வாழும் என்பதால் இதனை பிடிப்பது மிகவும் சவாலான விடையமாக கருதப்படுகின்றது.
இது கருவுறும் காலம் இரு மாதம்தான்.
இதன்போதுதான் கடலின் மையப்பகுதிக்கோ / மேல்பகுதிக்கோ வரும்.
ஆகவே ஆண்டிற்கு இரு மாதங்கள் மட்டுமே இவ்வகை மீன்களை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்குமாம்.
அதிக விலைக்கு விற்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாம்.
சுமார் 2 லட்சம் குரோக்கர்ரக மீன்களை 1970ம் ஆண்டு பகுதியில் சீனர்கள் பிடித்து உலகம் முழுதும் விற்பனை செய்தார்களாம்.
அதன் பின் கடலில் குரோக்கர்ரக மீன்களின் எண்ணிக்கை சடுதியாக குறைந்து விட்டதால் சர்வதேச இயற்கை பாதுகாப்பு மையம் இவ்வகை மீனை சிவப்பு பட்டியலில் சேர்த்து விட்டது.
இந்த மீன் அதிக விலைக்கு விட்கப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டாம்.
குரோக்கர்ரக மீன் அதிகமான மருத்துவ குணங்களை கொண்டதாம்.
இந்த மீனில் உள்ள ஏர் பிளாடர் எனும் பகுதி அறுவை சிகிச்சை முடிந்ததும் தையல் போடுவதற்கு பயன்படும்.
இதனை பயன்படுத்தி அறுவை சிகி.ச்சை செய் தால் பக்க விளைவு களின்றி காயம்குணமாகும் என மருத்து வர்கள் கூறு கின்றனர்.
கு றி ப் பா க இதயம் தொடர் பான அறுவை சிகிச்சைகளின் போ து இதனை பயன் படுத்தி னால் காயம் வெகு சுலபமாக மாறுவது மட்டுமில்லாமல் பக்க விளைவுகளே இல்லாமல் இருக்குமாம்.
அத்துடன் கேன்சரினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வா ழ் நா ளை யே அதிகரிக்கும் குணம் இம்மீனிற்கு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.