நாடு முழுதும் நடைமுறை செய்யப்பட்ட பயணத்தடையினால் மன்னாரில் பல கூலி தொழிலாள குடும்பங்கள் மன்னாரில் பதிக்கப்பட்டுள்ளமையால் உணவு தேவையை தினமும் பூர்த்தி செய்ய முடியாத குடும்பங்கள் கடற் கரையோர நீரில் மட்டி பொறுக்கி தமது உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பயணத்தடை காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தில் நேரடியாக பதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அன்றாட உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத சில குடும்பங்கள் கடற்கரையோர பகுதியில் மட்டி பொறுக்கி தமது உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உரிய தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் அன்றாடகூலி தொழிலில் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
பயணத்தடை ஒருபுறம் மக்களது வாழ்வாதாரத்தை பாதித்துள்ள நிலையில் மறுபுரம் அதிகரித்த விலை ஏற்றத்தினால் மரக்கறிகள் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாலும் மன்னாரில் அதிகமானோர் கடற்கரையோர பகுதியில் சேற்றுக்கு நடுவில் காணப்படும் மட்டியை சேகரித்து உணவு தேவையை பூர்த்திசெய்து வருகின்றனர்.
அரசினால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் கொடுப்பனவு சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டமையினால் வறுமை கோட்டுக்கு உட்பட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.