14ம் திகதி பயணத்தடை நீக்கப்படும்? ஆனால் தற்போதுவரை முடிவில்லை!
இப்போதைய கொரோனா சூழல் குறித்து சுகாதார நிபுணர்களுடன் நடைபெறும் கலந்துரையாடலில் நாட்டில் தீவிரமான கொரோனா நிலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே 14ம் திகதி பயண கட்டுப்பாடு நீக்கப்படும் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று வெளியாகிய தென்னிலங்கை பத்திரிகை ஒன்றில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14அம் திகதியுடன் பயண கட்டுப்பாடு விதிக்கபட்டு மூன்று வாரங்களுக்கு மேலாவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதார நிபுணர்களது ஆலோசனைப்படி பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது மிகவும் பொருத்தமாக அமையும் என தீர்மானம் எடுக்கப்பட்டதால் இவ் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய தரவுகளை ஆராய்ந்து சுகாதார நிபுணர்களுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களின் போது நாட்டில் தற்போது கொரோனா தீவிர சூழ்நிலை இல்லை உறுதிப்படுத்தபட்டால் மாத்திரமே பயணத்தடை 14ம் திகதி நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.