ஐநாவின் அடுத்த பொது செயலாளராகிறார் ஆன்டனியோ குட்டரெஸ்!

ஐநாவின் 10வது பொதுச் செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீளவும் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய(9வது) பொது செயலாளராக போர்ச்சுக்கல்லின் முன்னாள் பிரதமர் ஆன்டனியோ குட்டரெஸ் கடந்த 2017ம் ஆண்டு தொடக்கம் பதவி வகித்து வருகிறார்.

இவரது பதவி காலமானது எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவடையும் நிலையில், ஐநா.வின் அடுத்த பொது செயலாளரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்றையதினம் இடம்பெற்றது. இதில் ஆன்டனியோ குட்டரெசையே மீளவும் பொது செயலாளராக நியமிப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை அடுத்து, எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள பொதுச்சபை கூட்டத்தில் ஐ.நா.வின் அடுத்த பொது செயலாளராக மீளவும் ஆன்டனியோ குட்டரெஸ் தேர்வு செய்யப்படவுள்ளார்.

இவரது பதவிக்காலமானது 2026ம் ஆண்டு மார்கழி 31ம் திகதி வரை தொடரவுள்ளது.

Exit mobile version