இலங்கையாழ்ப்பாணம்

தொடர் பயணத்தடை விரக்தி! இருவர் தூக்கிட்டு தற்கொலை! யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர் பயணத்தடையினால் தனது வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமானது உடுத்துறை, ஆழியவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது

வாகனம் குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்பவர் கடல் உணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இதற்காக நிதி நிறுவனம் ஒன்றில் குத்தகை கட்டணத்தில் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வாகன கொள்வனவுக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துமாறு நிதிநிறுவன ஊழியர்கள் பணத்தை கோரியுள்ளனர். தன்னிடம் தற்போது 35ஆயிரம் ரூபாய்தான் உள்ளது.

மிகுதி பணத்தை கிடைத்தவுடன் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது நிதி நிறுவன ஊழியர்கள் அவரை ஏசியுள்ளனர்.

இதனை அடுத்து மனவிரக்தியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்ததாக நடைபெற்ற விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

தற்கொலை 2

வதிரி கரவெட்டி பிரதேசத்தில் வசித்து வரும் கோபசிங்கம் மயூரதன் (வயது-36) என்பவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்

இவர் தினமும் ஆலயங்கள், ஊர்கள், வெளிமாவட்டங்களென மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர் எனவும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருந்தமையால் ஏற்பட்ட மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவர் சில தொற்றாநோய்களினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்.

இதனால் தினமும் ஆலயங்கள், ஊர்கள் மற்றும் வெளி மாவட்டங்களென மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து வருபவர்.

இரு வாரங்களுக்கு மேலாக வீட்டுனுள் இருந்தமையால் தான் தற்கொலை செய்ய போவதாக மன விரக்தியுடன் கூறிவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக விசாரணையின் போது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button