ஓய்வுபெறுகிறார் மஹிந்த! பிரதமராக பதவி ஏற்கும் நாமல்?

இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தில் இலங்கையின் பிரதமராக நாமல் ராஜபக்‌ஷ பதவி பிரமாணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக உறுதி செய்யப்படாத அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தற்போது பிரதமராக உள்ள மஹிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் அப்பதவிக்கு நாமல் ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் மஹிந்த ராஜபக்‌ஷவிற்காக புதிதாக ஒருபதவி உருவாக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மிக வேகமான அரசியல் பயணத்திலே நாமல் ராஜபக்சவின் ஈடுபட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்புகளை கொண்ட அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் செய்யப்படும் முக்கிய வேலை திட்டங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளும் நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சென்றவார இறுதியில் நாமலுக்கு வழங்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப அபிவிருத்தி ராஜாங்க அமைச்சு பதவி ஆனது. கொழும்பு துறைமுகநகர திட்டத்தின் வெற்றிக்கான பங்களிப்பை வழங்க கூடிய அமைச்சாகவும் அமைந்துள்ளது.

சீனாவினை ஆட்சி செய்பவர்களுடன் நாமல் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு் இடையில் இணையத்தள மாநாடு ஒன்று அண்மையில் நடைபெற்றது. அதற்கு நாமல் ராஜபக்சவே தலைமை தாங்கியிருந்தார்.

இதன் அடிப்படையில் தற்போது அரசியல் தரப்பில் இவ்வாறு பேசப்படும் வதந்திகள் உண்மையாக மாறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.

Exit mobile version