தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21ம்திகதி வரை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தற்போதுவரை எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் பயண கட்டுப்பாடுகளை தொடர்பில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
21ம்திகதி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகள் குறித்து அவரிடம் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது ஒவ்வொருநாளும் மூவாயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை கருத்தில் கொள்ளவேண்டும்.
ஆகவே மக்களது பாதுகாப்பை கவனத்தில் எடுத்து இது குறித்து எடுக்க வேண்டிய தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுப்போம்.
எவ்வாறு இருப்பினும் என்றோ ஒருநாள் நாடு மீளவும் திறக்கப்படுகின்ற வரை மக்கள் தமது வீடுகளில் இருந்து தொற்றுநோயை கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியமானது என்றார்.