பொருளாதாரம் மிக முக்கியமானது! நாட்டை நீண்ட காலம் முடக்க முடியாது! அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு!

வைத்திய நிபுணர்கள் கூறு வதைப்போல் வருடம் பூராகவும் நாட்டை முடக்கி வைத்துக்கொ ண்டிருந்தால், நாட்டின் பொரு ளாதாரம் என்னாவது? நாட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது அவசியமானதே, ஆனால் அதை விடவும் நாட்டின் பொருளாதா ரத்தை கருத்தில் கொள்ள வேண் டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரி வித்தார்.

ஒரு நாளைக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மாத் திரம் 800 இலட்சம் ரூபா செல வாகின்றதாகவும் சுகாதார அமை ச்சர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளில் சுகாதார அமை ச்சு முன்னெடுக்கும் வேலை த்திட்டங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடு குறித்து அடுத்தகட்ட தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இத னை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் பரவிக்கொண்டுள்ள கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது நாடு முடக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்காலிக முடக்கத்தை சாதக மான பெறுபேறுகளாக வெளிப் படுத்தி எம்மால் தொடர்ந்தும் நாட்டினை முடக்கி மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைக்க முடியாது.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அதே வேளை யில் மக்களின் நாளாந்த வாழ் க்கை முறைமைக்கும் இடம ளிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடு க்கப்படுகின்றன.

இதில் மக்களின் செயற்பாடுகள் பிரதானமானது. மக்கள் தமது பாதுகாப்பை முத லில் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Exit mobile version