சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்துற்கு 9மைல் தொலைவில் தீப்பிடித்து எரிந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த பொருட்களது பட்டியல் வெளியாகியுள்ளது.
இதனை சுற்று சூழல் நீதி மைய இயக்குனர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
ஒரு கொள்கலனில் அபாயகரமான இரசாயனங்கள் இருந்துள்ளது.
மற்றையவற்றில் பொருட்கள் மூலம் அலுமினிய பதப்படுத்துதல், அழகு சாதனப் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்துள்ளன.
தகவல் அறியும் உரிமை உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களினை மக்களது நலனுக்காக வெளியிடுவதாகவும் அவர் தெரிவ்த்தார்.
தீப்பற்றிய கப்பலில் இருந்த பொருட்கள் இலங்கை கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் கப்பல் குப்பைகள், பொதிகளை மக்கள் தொடுவதை தவிர்க்கும் பொருட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டதாக அவெ மேலும் தெரிவித்தார்.